SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறை எதிரொலி : வெளுத்து வாங்கும் வெயிலால் களையிழந்த வைகை அணை

2019-04-15@ 12:31:48

ஆண்டிபட்டி: தமிழ் புத்தாண்டு மற்றும் கோடைவிடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கோடை வெயிலால் தவித்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், கோடை விடுமுறையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் நேற்று வைகை அணையில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை இருந்ததால் சுற்றுலா பயணிகள் மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சமைத்துக் கொண்டு வரப்பட்ட உணவுகளை பகிர்ந்து உண்டனர்.

மேலும் சிலர் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் நீர் வெளியேற்றப் பகுதிகளும் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக குளித்தனர். இதனால் வைகை அணையில் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் அணைப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சில சுற்றுலா பயணிகள் வைகை அணையில் உள்ள பூங்காக்கள் பசுமையாக இருக்கும், நன்றாக ரசிக்கலாம் என்று எண்ணி வந்தனர். ஆனால் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட புல்வெளிகள், செடிகள் கருகிய நிலையில் காணப்பட்டது.

மேலும் பெரும்பாலான மின்விளக்குகள் உடைந்தும், செயற்கை நீர்ஊற்றுகள் அனைத்தும் செயல்படாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். மேலும் மாலை 5 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்ததால் சிறுவர்களும், குழந்தைகளும் ஊஞ்சல் ஆடியும், யானை சிலையின் தும்பிக்கையில் சறுக்கியும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். எனவே, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், அணை பகுதியில் அதிகமான மரங்களை நடவு செய்யவும், பூங்களை உரிய பாதுகாத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்