SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி எல்லா காலங்களிலும் கடைபிடிக்கப்படும் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு, பக்தர்கள் வரவேற்பு

2019-04-15@ 05:33:10

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நேற்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. எல்லா காலங்களிலும் கடைபிடிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஒரு சில சிவன் மற்றும் முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் மற்றும் முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், பெரும்பாலான கோயில்களில் சமஸ்கிருத மொழியில் தான் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று முதல் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதேபோன்று இனி வருங்காலங்களில் ஒவ்வொரு நாளும் காலையில் கோயில் நடை திறந்தவுடன் பக்தர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் கூறுகையில், ‘தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நடையை திறந்தவுடன் அதிகாலையில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். மற்ற நேரங்களில் பக்தர்கள் கேட்டு கொண்டால் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். இந்த நடைமுறை இனி அனைத்து நாட்களும் கடைபிடிக்கப்படும்’ என்றார். வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற நடைமுறை பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்