SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மக்கள் பிரச்னைகளை 50 சதவீதம் கூட தீர்க்கவில்லை: ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை

2019-04-15@ 05:21:53

சென்னை: மக்கள் பிரச்னைகளை அரசு 50 சதவீதம் கூட தீர்க்கவில்லை என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்து பல்வேறு தனியார் அமைப்புகள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணிகள் மற்றும் வாக்காளர்களின் தேவைகளை அரசு எந்த அளவுக்கு பூர்த்தி செய்துள்ளது என்பது குறித்து நேற்று ஆய்வறிக்கை வெளியிட்டது.
அப்போது அவர்கள் கூட்டாக கூறியதாவது: தமிழகத்தில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 802 வேட்பாளர்களை ஆய்வு செய்துள்ளோம்.

அதில் 101 வேட்பாளர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.  67 வேட்பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் 184 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் அதிமுக 22 பேரும், மக்கள் நீதி மய்யத்தில் 19 பேரும், நாம் தமிழரில் 12, காங்கிரசில் 7, பாஜகவில் 5 வேட்பாளர்கள். இவர்களின் சொத்து சராசரியாக 3.46 கோடியாக உள்ளது. கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் (ரூ. 417 கோடி), அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா (ரூ. 237 கோடி), அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (ரூ. 126 கோடி) உள்ளனர்.இதேபோல் அதிக கடன் உள்ள வேட்பாளர்களில் வசந்தகுமார், தஞ்சாவூர் வேட்பாளர் முருகேசன், வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் உள்ளனர். மேலும், 140 வேட்பாளர்கள் தங்களது பேன் (நிரந்தர வருமானவரி கணக்கு எண்) நம்பரை தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் 40.20 சதவீத மக்கள் வேலை வாய்ப்பும்,  37.47 சதவீத மக்கள் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், 35.02 சதவீத மக்கள் குடி தண்ணீரும் கோரினர். ஆனால் அரசு 5 மதிப்பெண்ணுக்கு வேலைவாய்ப்பில் 2.25, மருத்துவத்தில் 2.34, குடிநீர் 2.41 மட்டுமே பெற்றுள்ளனர். இதேபோல் கிராமப்புற மக்களின் தேவைகளில் 5க்கு விவசாய நீருக்கு 2.19, விவசாய கடன் 2.14, விவசாய மானியத்துக்கு 2.35 மட்டுமே பெற்றுள்ளது. இதேபோலவே நகர்புறங்களிலும் 2 மதிப்பெண்களை தாண்டவில்லை. மேலும் அரசின் செயல்பாடு மக்களிடம் 50 சதவீதத்திற்கு கீழேதான் உள்ளது. மக்கள் இலவசத்தை கேட்கவில்லை, வேலை தான் கேட்கின்றனர்.இவ்வாறு கூறினர்.

குற்றவழக்கில் அன்புமணிக்கு முதலிடம்

வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அன்புமணி மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்