SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்தில் ஆந்திர போலீஸ்காரர் பலி பெற்றோருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

2019-04-15@ 03:01:20

சென்னை: விபத்தில் உயிரிழந்த ஆந்திர போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சத்து 97 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (28). இவர், ஆந்திர மாநிலத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், நகரி பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து டில்லிபாபு மீது மோதியுள்ளது. அந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டில்லிபாபுவின் தாய் சுசிலா, தந்தை பிரபாகர் ஆகியோர், சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தனது மகன் இறப்புக்கு ரூ. 56 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஐயப்பன் முன்பு விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்து போன டில்லிபாபு காவல்துறையில் பணியாற்றியுள்ளார். அவரது ஆதார் அட்டையை வைத்து பார்த்ததில் வயது 28. மேலும் மாதம் ரூ. 25 ஆயிரத்து 472 சம்பளமாக வாங்கி வந்துள்ளார். அவரது இறப்பு பெற்றோருக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே தமிழக அரசு போக்குவரத்து கழகம் உயிரிழந்த டில்லிபாபுவின் பெற்றோருக்கு ரூ. 40 லட்சத்து 97 ஆயிரத்து 216 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்