SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம்

2019-04-14@ 10:38:51

சியோல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.

ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது. இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார். இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்