SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிய பசிபிக் டேக்வாண்டோ தமிழக வீரர்கள் அசத்தல்

2019-04-14@ 01:42:49

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் டேக்வாண்டா போட்டியில்  இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வென்று அசத்தியுள்ளனர்.  மலேசியா தலைநகர் கோலாலம்பூரில்  முதலாவது ஆசிய-பசிபிக் டேக்வாண்டோ போட்டி (யு-18) கடந்த மாத இறுதியில் நடைப்பெற்றது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா,  தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 பேர் பங்கேற்றர். இந்தியா சார்பில் பங்கேற்ற 55 பேர்களில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 9 தங்கம், 2 வெள்ளி,  5 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதில் தமிழக வீரர்கள் 6 தங்கம், 2 வெண்கலம் வென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த  தீக்‌ஷிதா,  தனுஷ் நாராயணன் தலா 2 தங்கம், அருண், பொற்செழியன் தலா ஒரு தங்கம் வென்றனர்.  ஆகாஷ், பிரஜன் தலா ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்