SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 ரூபாய் நோட்டும், மேக்அப் முகமும் ஏன் ஓட்டு வாங்கி தராது என்பது குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-14@ 01:12:41

‘‘தினமும் உளவுத்துறை அறிக்கை வந்து கொண்டே இருக்காமே, அப்டியா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எனக்கு கிடைச்ச தகவல் படி தினந்தோறும் உளவுத்துறை அறிக்கை இலை கட்சிக்கு வந்து கொண்டே இருக்காம்... ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் கிடைப்பதால் இலை கட்சி தலைவர்கள் மண்டையை பிய்த்து கொண்டிருக்கிறர்கள்... இது போதாது என்று கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டதாம்... தப்பும் தவறுமாக பேசி மீம்ஸ்களில் இவர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்களாம்... இதுவும் வாக்கு வங்கி சரிய காரணமாக இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நீட் பிரச்னையில இலை கட்சி மண்டை காயுதுபோல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மத்திய அமைச்சர் ஒருத்தர் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வை கொண்டு வருவோம்னு சொன்னார்... இலை கட்சி தேர்தல் அறிக்கையில நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் பேசி விலக்கு கோரும்னு சொல்றாங்க... இதனால் மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்காம்... யார் சொல்வது பொய் என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்களாம்... இதனால் ஓட்டு திரும்பும் வாய்ப்பு இருப்பதால் இலை கட்சி பதற்றத்தில் இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகரும் கிப்ட் பாக்ஸ்காரரும் தங்களை பெரிய தலைவர்களாக நினைக்க தொடங்கி இருக்காங்க போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒருத்தர் கூட்டத்துக்கு போனால் 20 ரூபாய் கிடைக்கும்னு நினைச்சு போறதால ஏதோ கொஞ்சம் கூட்டம் சேருதாம்... நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூட்டம் கூடுதாம்... இது எல்லாம் ஓட்டாக மாறும் என்று நினைத்து பிரதமர் ரேஞ்சுக்கு இரண்டு பேரும் பொதுக்கூட்டங்களில் பேசி வர்றாங்க... ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கப்போறதில்லை என்று மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து இருக்காம்... இது பணத்துக்காகவும் பாப்புலாரிட்டிக்காகவும் கூடுற கூட்டம்... ஒன்று அல்லது இரண்டு சதவீத ஓட்டுகளை மட்டுமே பிரிக்கும் கவலைப்பட வேண்டாம்னு அதுல இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ டாஸ்மாக் கடைகள் மூடாததும் இலை கட்சிக்கு பாதகமாக இருக்கும்போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நாளுக்கு நாள் புதிய புதிய கடைகள் தொடங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். சென்னையில் அரும்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் உள்ளது. இந்த கடை அருகே உள்ள பார் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள போலீசாரும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி வந்து பஸ் நிலையத்திற்கு உள்ளே வைத்தும் குடிக்கிறார்கள். கடையை நீக்காவிட்டால் தேர்தலில் எங்கள் பலத்தை காட்டுவோம்னு அந்தப் பகுதி பெண்கள் முடிவு எடுத்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர்ல வீரமான அமைச்சர் தொகுதியில் உள்ள பிடிஓ அலுவலகத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது. இதற்கான பயனாளிகளை ஆளுங்கட்சியினரே பகுதி வாரியாக பிரித்துக் கொண்டு தேர்வு செய்கிறார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருவாய்தானாம். அதேநேரத்தில் பயனாளிகள் வீடு கட்டத்தொடங்கி முடிக்கும் வரை மூன்று தவணைகளாக அவர்களுக்கு காசோலை மூலம் பணம் வழங்கப்படுகிறது. ஆனால் காசோலை பெறுவதற்கும் அதிகாரிகளுக்கு பர்சன்டேஜ் தர வேண்டுமாம். இதுதவிர வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் சிமெண்ட், கம்பி, கதவு, ஜன்னல் போன்றவைகள் சரிவர வழங்கப்படாமல் அதற்காகவும் அதிகாரிகளுக்கு தனியாக கவனிக்க வேண்டுமாம்.

பழுது பார்ப்புக்காக பொதுமக்களுக்கு அளிக்க  வேண்டிய சிமெண்டை வெளிமார்க்கெட்டில் கொஞ்சம் விலையை கூட்டி விற்று விடுகிறார்களாம்.
இதுபற்றி அதிகாரிகளிடத்தில் கேட்டால், கேட்பவர் ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டுமே அதிகாரிகள் பதில் கூறுகிறார்களாம். சாதாரண ஆட்கள் என்றால் மிரட்டி அனுப்பி விடுகிறார்களாம். இதை உள்ளூர் அமைச்சரான வீரமானவரும் கண்டுகொள்வதில்லை என்று வருத்தப்படுகின்றனர் பொதுமக்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நெல்லையில் இலை கட்சி வாக்கு சேகரிக்க முடிலையாமே... அப்டியா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பாஜ கூட்டணியில் அதிமுக இடம்பெற்றதால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அவர்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக மாவட்ட செயலாளரும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் அவரை வைத்து முஸ்லிம் ஓட்டுகளை பெறலாம் என அதிமுகவினர் திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களது ஜம்பம் பலிக்கவில்லை.

மேலப்பாளையம் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்க செல்ல முடியவில்லை. கூட்டணி கட்சியான பாஜ கொடியை கட்டிக் கொண்டு பிரசாரத்திற்கும் செல்ல முடியவில்லை. மேலும் பாஜ இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு ஓட்டு கேட்கக் கூடாது என்று அனைத்து ஜமாஅத்திலும் முடிவு செய்துள்ள நிலையில், தேமுதிக மாவட்ட நிர்வாகி பிரசாரங்களுக்கு செல்லாமல் ஒதுங்கியே உள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்