SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடுக்கிற பேட்டாவை ஆட்டய போடும் கேப்டன் கட்சி தலைமை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-13@ 03:43:14

ஆட்டோவில் அரசியலை விவாதித்துக்கொண்டு வந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும். பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது அதை சுற்றி அரசியல் கட்சிகளின் பிரசாரம் களைகட்டியிருந்தது.
 ‘‘பாமக மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் திடீர்னு கட்சியில இருந்து விலகிட்டாரே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா.. கூட்டணி பிடிக்காம விலகிட்டதா சொன்னாரு. கட்சிக்காரர்களை ராமதாஸ் ஏமாத்திட்டதாவும் குற்றம்சாட்டினார். இப்ப திடுதிப்னு அமமுக கட்சியில இணைஞ்சிட்டார்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தேர்தல் நெருங்கநெருங்க பல கட்சிகளில் இருந்து ஓட்டம் இருக்கும் போல..’’ என்று சிரித்த பீட்டர் மாமா, ‘‘கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை திடீரென்று பிஷப்புகள், போதகர்களுடன் சந்திப்பு, வாழ்த்து பெறுதல், சிறுபான்மை அமைப்பு தலைவர்களின் காலில் விழுதல் என்று தனது பிரசார பாணியை மாத்தியிருக்காராமே..’’ என்று கேட்டார்.
 ‘‘உண்மைதான்.. பிஷப்புகளை நேரடியாக சென்று சந்தித்து அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் பொன்னார் உறுதிமொழி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவினர் சிலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதனை அவ்வப்போது படத்துடன் செய்தி குறிப்பாகவும் கட்சியினர் வெளியிட்டு வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் பாஜ கட்சியிலேயே ஒரு தரப்பினர் இதனை ரசிக்கவில்ைல. இதனால் இப்போது முடிவை மாற்றிவிட்டு சந்திப்பு நடக்கட்டும், ஆனால் படத்துடன் செய்திக்குறிப்புகள் ஏதும் வெளியிட வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓஹோ.. அப்புறம் மய்ய கட்சி நிலைமை என்ன..’’
 ‘‘மநீம சார்பில் கன்னியாகுமரியில் சென்னையை சேர்ந்த எபநேசரை வேட்பாளராக நிறுத்திய நிலையில் தனியே தன்னந்தனியே... என்ற நிலையில் அவர்களது பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரத்திற்கு வேட்பாளர் செலவு செய்வார் என்று எதிர்பார்த்தால் கட்சியில் உள்ள கீழ் மட்ட நிர்வாகிகளின் பாக்கெட்டில் கைவைக்க தொடங்கிவிட்டார்களாம். நாகர்கோவிலில் 14ம் தேதி மய்ய தலைவர் கமல் வருகைக்காக பொதுக்கூட்டம் அமைக்க மேடை அமைக்கும் இடத்திற்கான செலவு தொகையையும் கட்சியினரே செலுத்த வேண்டியது ஆகிவிட்டதாம். இதனால் அகட்சியினர் கையை பிசைந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் புள்ளிகள் வரும்போதும், பொதுக்கூட்டம் நடத்தும்போதும், ஆள்பிடித்து, கூட்டம் சேர்ப்பதற்குள் உள்ளூர் கட்சிக்காரர்களுக்கு போதுமடா சாமீ என அலுப்பு தட்டிவிடுகிறதாமே..’’
 ‘‘கோவை தொகுதி பா.ஜ வேட்பாளர் மற்றும் பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, பிரதமர் மோடி ஏப்.9 அன்று கோவை வந்தார். இந்த கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்குள் அதிமுகவினர் படாதபாடு பட்டுவிட்டனர். கோவை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பஸ், வேன்களை நி.றுத்தி, ஆட்களை ஏற்றி வரவேண்டும்... தலைக்கு 300 ரூபாய், சாப்பாடு பொட்டலம், குவாட்டர் கொடுக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால், பலருக்கு குவார்ட்டர் கிடைக்கவில்லை. இதனால், குவார்ட்டருக்காக கடும் பட்டிமன்றமே நடந்தது. கடைசியில், கூடுதலாக 200 ரூபாய் சேர்த்து கொடுத்தால்தான் வண்டியில ஏறுவேன்.. என அடம் பிடித்தனர். இதனால், பல இடங்களில் இருந்து வாகனம் புறப்பட ரொம்பவே தாமதம் ஆகிவிட்டது. பொதுக்கூட்ட மைதானத்தில் காத்திருந்த அதிமுக முக்கிய புள்ளிகள், ஏம்பா... வண்டி இன்னும் வரலையா... என கேட்க, அண்ணே... குவார்ட்டரு பெரும் பேஜாரு ஆயிட்டுது..... ஆனாலும், சமாளிச்சிட்டோம்... வண்டி வந்துக்கிட்டு இருக்கு... என உள்ளூர் நிர்வாகிகள் பதில் அளித்தனர். எப்படியோ, மோடி வருவதற்குள் கூட்டத்தை காட்ட வேண்டும்... இல்லைன்னா, தொலைச்சிபுடுவேன்... என எச்சரிக்கை விடுக்க, கூட்டம் வந்து சேர்ந்தது. கோவை புறநகர் பகுதியில் இருந்து மோடி பொதுக்கூட்டம் நடந்த கொடிசியா மைதானத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்தன. ஆனால், பல வாகனங்களில் ஆட்களையே காணோம்... மனித தலைகளுக்கு பதிலாக, வாகன கூட்டம்தான் அதிகளவில் கண்ணுக்கு தெரிந்தது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அண்ணாமலையார் தொகுதியில் நிலவரம், கொஞ்சம் கலவரமா தான் இருக்காமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா, எட்டுவழிச்சாலை திட்டம் உள்பட பல விஷயங்களில் அதிமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளதாம், பணப்பட்டுவாடாவும் கணிசமான ஓட்டை பிரிக்குமாம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’
‘‘மாங்கனி தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு கூட்டணி கட்சியினர் தினமும் செல்கின்றனர். அப்படி வரும் கூட்டணி கட்சியினரை குளிர்விக்க தினமும், அந்தந்த கட்சியின் தலைமை நிர்வாகியிடம் ₹50 ஆயிரத்தை கொடுத்து வாராங்களாம். அந்த தொகையை பிரித்துக் கொடுத்து, கட்சி நிர்வாகிகளை குளிர்விக்க சொல்லியிருக்காங்க. ஆனா, இதுல கேப்டன் கட்சியின் தலைமை நிர்வாகி மட்டும் தன்னிடம் வரும் 50ஆயிரத்தில் 20ஆயிரத்தை மட்டும் கட்சிக்காரங்களுக்கு பெட்ரோல் போடவும், மதியம் சாப்பிடவும் கொடுத்துவிட்டு, மீதி 30 ஆயிரத்தை ஆட்டைய போட்டு வாராராம். இதை சில நிர்வாகிகள் கேட்க, உட்கட்சிக்குள் கடும் பிரச்னை வந்துட்டதாம். இது தலைமை வரைக்கும் சென்றுள்ளதாம். மேலும், கொடுக்கிற பணத்தை சரியாக பிரித்து கொடுக்காமல், தினமும் 30 ஆயிரத்தை நம்ம தலைமை நிர்வாகி ஆட்டைய போடுராரே என முன்னணி நிர்வாகிகளும் கடும் புகைச்சலில் உள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

 • roborestaurantbang

  பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்