SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபுதாபியில் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் நடராஜர் சிலை

2019-04-07@ 00:16:03

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி ஷாதியத் தீவில் மிகப்பெரிய அளவில்  2017ம் ஆண்டு  திறக்கப்பட்ட லூவர்  அருங்காட்சியகத்துக்கு, உலகளவில் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான அரிய கலைப்பொருட்கள் இடம் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஓவியங்கள், சிலைகள், பண்டைய கால பொருட்களிலிருந்து தற்காலம் வரையான கலைப் பொருட்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகபெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த 86 செ.மீ., உயரம் உள்ள நடராஜர் சிலை இடம் பெற்றுள்ளது. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா கான்பெர்ராவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 2009ம் ஆண்டு முதல் இருந்தது. தற்போது இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  மிக அரிய புராதனமிக்க நடனமாடும் நடராஜர் சிலையானது  ஆயிரக்கணக்கான இந்தியர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து இழுத்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்