SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை காலத்தில் கோழிப்பண்ணையை பராமரிப்பது எப்படி

2019-03-30@ 16:04:17

கோழி வளர்ப்பு என்பது நம் விவசாயிகளிடையே தொன்று, தொட்டு இருந்து வரும் வீட்டு பழக்கமாகும். இந்த ஆதாரத்தை கொண்டே கோழி வளர்ப்பில் நாம் முன்னேறி கொண்டே வருகிறோம். 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலக இறைச்சிக்கோழி உற்பத்தியில் இந்தியா 5வது இடமும், முட்டை உற்பத்தியில் 3வது இடமும் வகிக்கிறது. பொதுவாக கோடை காலம் என்பது கோழி பண்ணையாளர்களுக்கு சவாலான காலம் ஆகும்.


ஏனெனில் கோழிகள் அதிகளவில் இறக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். அதாவது கோடை காலத்தில் நோய்களும், வெப்ப அயர்ச்சியும் அதிகள வில் தாக்க நேரிடும். கோழிகளுக்கு மனிதனை போல் வியர்வை சுரப்பிகள் கிடையாது.


கோடை காலங்களில் குறிப்பாக வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் போது கோழிகள் தன்உடலின் வெப்பத்தை வியர்வையின் மூலமாக வெளியேற்ற இய லாது. எனவே கோழி பண்ணையாளர்கள் மற்றும் கோழி வளர்ப்போர் வெப்ப அயர்ச்சி நிவர்த்தி முறைகளை கடை பிடிக்க வேண்டியது அவசியமானது என என தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேரா சிரியர்கள் ரிச்சர்டு ஜெகதீசன், ஷிபிதாமஸ், ஜெயலலிதா ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:

 பராமரிப்பு முறைகள்

கோழிப் பண்ணைகளில் கூரை பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்டே அமை க்கப்பட்டுள்ளது. இது அதிகமாக வெப்பத்தைக் கடத்தக் கூடியது. எனவே கூரை யின் மேற்புறம் பனைஓலை, தென்னை ஓலை கொண்டு வேய்ந்து விடலாம். மேலும் கூரையின் மேற்புறம் சுண்ணாம்பு பூசுவதன் மூலம் வெப்பமானது குறையும். கூரையின் மேற்புறம் அவ்வப்போது நீர் தெளித்து விடலாம். விசை தெளிப்பான் கொண்டும் நீர் தெளிக்கும்படி அமைத்து விடுதல் கோடை காலத்தில் சிறந்தது. கோழி பண்ணைக்கு உட்புறமும் நீர் தெளிக்கும் படிவிசை தெளிப்பான்கள் பயன் படுத்தலாம்.

ஆனால் இவ்வாறு பயன்படுத்தும் போது மின் விசிறி பயன் படுத்த வேண்டும். இல்லையெனில் ஈரப்பதம் அதிகரித்து விடும். ஒவ்வொரு பத்து நிமிட த்திற்கும் ஐந்து நிமிடம் ஓடும் படி விசைத் தெளிப்பான்களை பயன் படுத்துதல் நலம்.  ஆழ்கூள முறையில் வளர்க்கப்பட்டால் ஆழ்கூளத்தின் உயரத்தினை குறைத்து விட வேண்டும். கூளத்தை அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிப்பண்ணை களில் குறிப்பாக குடிநீர்த் தொட்டிகளை வெப்பம் பாதிக்காதவாறு தென்னை அல்லது பனைஓலை கொண்டு மூடி விட வேண்டும்.தொட்டியின் வெளிப்புறம் சுண்ணாம்பு கொண்டு பூசிவிட்டால் அது வெப்பத்தை பிரதிபலித்து விடும்.

இதே போல் தொட்டியிலிருந்து பண்ணைக்கு வரும் நீர்க்குழாய்களை கோணி ப்பை கொண்டு மூடி வைக்க வேண்டும். இதன் மேல் அவ்வப்போது தண்ணீர் தெளிப்பதன் மூலம் பண்ணைக்கு செல்லும் தண்ணீர் சூடாகாமல் இருக்கும். கோழிகளுக்கு நீர் மிகவும் அவசியம் என்பதால் நீர்க்கலன்களை அவ்வப் போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தானியங்கி குடிநீர் (நிப்பிள்) முறைகள் எனில் அனைத்து நிப்பிள்களிலும் தண்ணீர் வருகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோழிகளுக்கான இட வசதி: கோழிகளின் மீது நீர்தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சி குறையும். பண்ணையின் வெளிப்பகுதியில் இரு புறமும் கோணிப்பைகளை தொங்க விட்டு அவற்றின் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்ப தாக்கத்தை குறைக்கலாம் பண்ணையின் இருபுறமும் மரங்களை நடுதல் நல்லது. தீவன பராமரிப்பு: ோழிகள் குளிர் காலங்களை விட கோடை காலங்களில் தீவனம் குறைவாகவே உட்கொள்ளும். எனவே தேவையான சத்துக்கள் குறைவாகவே கிடைக்க பெற்று எடை குறையும். முட்டை உற்பத்தியும் குறையும்.

குறைந்து அளவு தீவனத்தை அடிக்கடி பிரித்து கொடுக்கவும். கோழி தீவனத்தில் திரவ எண்னெய் 5 சதவீதம்  வரை சேர்க்கலாம். இதன் மூலம் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியை தவிர்க்கும். தீவனத்தில் புரத அளவினை 1முதல் 1.5சதவீதம் வரை குறிக்க வேண்டும். பதிலாக 5முதல் 10சதவீத அமினோ அமிலங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் எரி சக்தியின் அளவினை குறைத்து கொடுக்க வேண்டும். கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சி காரணமாக நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதனால் 5 முதல் 10 விழுக்காடு வரை வைட்டமின்களை கோழி தீவனத்தில் சேர்க்க வேண் டும். தாது உப்பு கலவை (கால்சியம், பாஸ்பரஸ்) மற்றும் வைட் டமின் கலவை களை (சி மற்றும் இ) கலந்து கொடுக்கவும். இது கொடைகாலத்தில் ஏற்படும் அயர்ச்சியினை குறைக்கும்.

வெப்ப காலங்களில் கோழிகளில் வெப்பம் சுவாசம் வெளியேறுவதால்  முட்டைக் கோழிகளில் முட்டையின் கெட்டித்த தன்மை பாதிக்கப்பட்டு தோல் முட்டை  உருவாகிறது. இதனை தவிர்க்க கோழி தீவனத்தில் 1 முதல் 1.5 கிலோ சோடியம் பை கார்போனேட் சேர்க்க வேண்டும். தீவன உட்கொள்ளும் திறனை அதிகரிக்க எப்போதும் குளிர்ந்த நேரங்களில் தீவனம் அளிக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள காலங்களில் தீவனதின் அளவை குறைத்து காலை மற்றும மாலை வேளைகளில் தீவன அளவை அதிகரி த்து கொடுப்பது சிறந்தது.

மேலும் தீவனத்தை சிறிது நீருடன் கலந்து அளிக்கலாம். அனால் இவ்வரும் நீர; கலந்து தீவனம் அளிக்கும் போது கோழிகள் உடனே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் பூஞ்சை காளான் தொற்று  ஏற்படும். எனவே தீவனம் உண்ப தற்கு ஏற்றவாறு  இரவு நேரங்களில் வெளிச்சம் அளிக்க வேண்டும்.

 குடிநீரில் கலக்க வேண்டியவை

குளிர்ந்த மற்றும் சுத்தமான தண்ணீர் எப்போழுதும் கிடைக்க  வேண்டும். தண்ணீர் உட்கொள்ளும் அளவு 3முதல் 4மடங்கு அதிகரிக்கும். தண்ணீர் தொட் டிகள் மேல் நனைந்த் சாக்கை போட்டு மூடவேண்டும். ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் வீதம் எலெக்ட்ரோல் கலந்து குடிநீரில் கலக்க வேண்டும். பொட்டாசியம் கிளோரைட்  ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தும் அளிக்கலாம்.

இதே போல் 10லிட்டர் தண்ணீருக்கு ஒரு எலுமிச்சை பழ சாற்றை கலந்து கொடு ப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியை தடுக்கலாம். உப்பு சிறிது அளவு தண்ணீரில் கலந்து கொடுத்தால் தண்ணீர் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்.பச்சை இலை, தழைகள், பசுந்தீவனம், கீரைகள் மற்றும் நீர்த்த மோர் போன் றவற்றை கோழிகளுக்கு கொடுக்கலாம். கோழிப் பண்ணையாளர்கள் மேற்கூறிய பராமரிப்பு முறைகளை கையாண்டு தங்கள் பண்ணையில் கோடை யில் எற்படும் இழப்பினைத் தவிர்க்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்