SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்ப

2013-05-03@ 02:48:51

நாகை : நாகை அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் தலையாமழை அருகே கிராந்தி கிராமத்தில் ஒரு புதரில் பழங்கால புத்தர் சிலை இருப்பதை மக்கள் பார்த்தனர். இதுகுறித்து, தகவலறிந்த வரலாற்று ஆர்வலர் குழு முதன்மை செயலாளர் ராமச்சந்திரன், குழு உறுப்பினர் காளிமுத்து ஆகியோர், கிராம மக்களின் உதவியுடன் சிலையை மீட்டு சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து, ''சோழ நாட்டில் பவுத்தம்'' என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் முனைவர் ஜம்புலிங்கம் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் புத்தமங்கலம், குத்தாலம், பெருஞ்சேரி, புஷ்பவனம், பூம்புகார் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. பூம்புகாரில் உள்ள புத்தர் சிலை நின்ற நிலையிலும், மற்றவை அமர்ந்த நிலையில் தியான கோலத்திலும் உள்ளன.

கிராந்தி கிராமத்திலுள்ள புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இந்த சிலை 32 அங்குலம் உயரம், 22 அங்குலம் அகலத்தில் உள்ளது. பீடத்தின் மீதுள்ள இச்சிலையின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் சுருள் முடி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலுள்ள தீச்சுடர் உடைந்த நிலையில் உள்ளது. நீண்டு தொங்கிய காதுகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், உள்ளங்கையில் தர்மச்சக்கர குறி காணப்படுகிறது.

மார்பிலும், இடுப்பிலும் உடை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளில் உள்ள பொதுவான கூறுகள் அனைத்தும் இந்த சிலையில் காணப்படுகிறது. சிலையின் பீடத்தில் ''கிராந்தி தெப்பிள்ளை'' என்ற 11, 12ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கல்வெட்டு பொறிப்புடன் காணப்படும் புத்தர் சிலைகள் மிக அரிதாகும். கிராந்தி தெப்பிள்ளை என்பது இந்த சிலையை கொடையாக கொடுத்தவரை குறிக்கும்''என்றார்.  இது, நாகை மாவட்டத்தில் கிடைத்துள்ள 6வது புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன