SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்கேல் அதிரடி அரை சதம்: பஞ்சாபிடம் சுருண்டது ராஜஸ்தான் அணி

2019-03-26@ 06:45:32

ஜெய்பூர்: நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் ராஜஸ்தான் 15 ரன் வித்தி யாசத்தில் சுருண்டது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கேல் களமிறங்கினர். ராகுல் 4 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து கிறிஸ் கேலுடன் அகர்வால் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். அகர்வால் 22 ரன் எடுத்து கவுதம் பந்துவீச்சில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, சர்பராஸ் கான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய கிறிஸ் கேல் அரை சதம் அடித்தார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க விட்ட அவர் ஐபிஎல் தொடரில் 4,000 ரன் மைல்கல்லை கடந்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. சர்பராஸ் கான் 46 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), மன்தீப் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
ரஹானே, பட்லர் ஜோடி முதலில் ஆட வந்தது. ஸ்கோர் 78ஐ எட்டியபோது, 9வது ஓவரில் பந்து வீச அஸ்வின் வந்தார். அவரது முதல் பந்தில் க்ளீன் போல்டு ஆகி 27 ரன்களுடன் ரகானே வெளியேறினார். அடுத்ததாக சஞ்ஜு சாம்சன் களமிறங்கினார். 12.5 ஓவர் ஆன நிலையில், ஜாஸ் பட்லர் ரன் அவுட் ஆனார். 2 சிக்ஸ், 10 பவுன்டரியுடன் அவர் 69 ரன் குவித்தார்.

பட்லருக்கு பின் ஸ்டீவன் ஸ்மித் ஆட வந்தார். 15வது ஓவர் முடிந்தபோது ஸ்கோர் 135 ஆக இருந்தது. 16வது ஓவரை வீசிய சமியின் 2வது பந்தில் ஸ்மித் 6 அடித்தார். சஞ்ஜுவின் 30 ரன் எடுத்த பின் சாம் கரண் பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 170 ரன்னில் சுருண்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்