SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3வது டி20யிலும் அபார வெற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா

2019-03-26@ 01:07:25

ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணியுடனான 3வது டி20 போட்டியில், 45 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்ற தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. மார்க்ராம் 15, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 66 ரன் (52 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டுவைன் பிரிடோரியஸ் 77 ரன் (42 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஜீன் பால் டுமினி 34 ரன்னுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதைத் தொடர்ந்து 17 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய இலங்கை அணி, 15.4 ஓவரில் 137 ரன் மட்டுமே எடுத்து தொடர்ச்சியாக 3வது தோல்வியைத் தழுவியது. டிக்வெல்லா 38 ரன் (22 பந்து, 7 பவுண்டரி), இசுரு உடனா 36 ரன் (23 பந்து, 4 சிக்சர்), ஏஞ்சலோ பெரேரா 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பெலுக்வாயோ 4, ஜூனியர் டாலா, சிபம்லா தலா 2, பிரிடோரியர் 1 விக்கெட் வீழ்த்தினர்.  தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. டுவைன் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருதும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்