SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 5 ஆண்டுகளில் வீடுகள் விலை 7% உயர்வு: ஜிஎஸ்டி, ரெராவால் ரியல் எஸ்டேட் பாதிப்பு

2019-03-26@ 00:17:33

* புதிய கட்டுமானங்கள்; விற்பனை சரிவு

புதுடெல்லி: வீடுகள் விலை கடந்த 5 ஆண்டுகளில் 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை சில ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. குறிப்பாக, பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரியல் எஸ்டேட் அடியோடு சரிந்தது. இதுபோல் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகும் இந்த துறை பாதிப்பு அடைந்தது. இதற்கிடையில், ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி,டெல்லி என்சிஆர், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 7 சதவீதம் உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ரெரா சட்டம் அமல்படுத்தியது, ஜிஎஸ்டி போன்றவை ரியல் எஸ்டேட் துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இவை நீண்டகால பலனை வழங்குமா அல்லது இன்னும் இடர்பாடு ஏற்படுமா என கூற இயலாது.

 இவற்றில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததால், ரியல் எஸ்டேட் தொழில் அதலபாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் புதிய வீடுகள் கட்டுவது 64 சதவீதம் குறைந்து விட்டது. கடந்த 2014ம் ஆண்டின்படி, சுமார் 5.45 புதிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் 2018 கணக்கீட்டின்படி இந்த எண்ணிக்கை 1.95 லட்சமாக குறைந்து விட்டது. வீடுகள் விற்பனையும் 28 சதவீதம் சரிந்து விட்டது. 2014ல் எடுத்த கணக்கீட்டின்படி 3.43 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியிருந்தன. 2018 கணக்கின்படி இது 2.48 ஆக குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் புதிய வீடுகள் கட்டுவது 64 சதவீதம்,  வீடுகள் விற்பனையும் 28 சதவீதம் சரிந்து விட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்