SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேமன்ட் வங்கிகள் பிரச்னை இந்தவார இறுதியில் ஆலோசனை: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

2019-03-26@ 00:17:33

புதுடெல்லி: பேமன்ட் வங்கிகள் விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், இந்த வார இறுதியில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 7 பேமன்ட் வங்கிகள் இயங்குகின்றன. இவற்றுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் 2 மாதங்களில் வெளியிடப்பட உள்ளன. இவற்றை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை இறுதி செய்வதற்கு முன்பு, பரிசோதனை அடிப்படையில் பேமன்ட் வங்கிகள் இவற்றை செயல்படுத்தி வருகின்றன.

இதில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள், தீர்வுகள் தொடர்பாக இந்த ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்த இருக்கிறது. முன்னோட்டம் பார்த்தபிறகு செயல்படுத்துவதால், செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடியும். திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு இது உதவும். இந்த சூழ்நிலையில், இந்த வார இறுதியில் பேமன்ட் வங்கிகள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்