SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

37 ஆண்டுகளில் முதல் முறை: தெலங்கானா மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை

2019-03-25@ 16:37:06

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து 37 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தெலுங்கு தேசம் கட்சி இல்லாமல் தெலங்கானா பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வருகிற ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

ஆந்திராவும் தெலங்கானாவும் தனித்தனி மாநிலங்களாக கடந்த 2014ம் ஆண்டு பிரிந்தன. இதையடுத்து தெலங்கானாவில் பிரதான கட்சியாக இருக்கும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி கட்சியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சேரத் தொடங்கினர். கடந்த ஆண்டு நடந்த தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட தெலுங்குதேசம் 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு எடுத்துள்ளது. இது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்