SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பறக்கும் படையினர் அதிரடி வேட்டை : கோடி கணக்கில் ரொக்கம், மதுபாட்டில்கள் பறிமுதல்

2019-03-25@ 15:58:22

புதுச்சேரி : தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் பல இடங்களில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்ற போலீசார் 6 பைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். குரூஷுக்கம்பூத்தில் பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 168 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தென்காசி அருகே வல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.4.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பூ வியாபாரி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த பறக்கும் படையினர் 35 பண்டல்களில் எடுத்துச் சென்ற அதிமுககறை வேட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப வாகனத்தில் கொண்டு சென்ற ரூ 1 கோடியே ரூ 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து பேருந்தில் சென்னை வந்த பயணிகள் 4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கையில் இதுவரை ரூ.33.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.33.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் அளித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் இதுவரை 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்