SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது : தமிழக அரசு

2019-03-25@ 14:36:25

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் எஸ்பி மீதும், உள்துறை செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது.

அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.எனவே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீதும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். எனவே, இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு தகவல்


இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ நடராஜன் கோவை மாவட்ட எஸ்பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிரான புகாரில் கோவை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மனுதாரர் டிஜிபிக்கு அனுப்பிய கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தை நாட முடியாது எனவும் முதலில் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் நேரடியாக விசாரணைக்கு உத்தரவிட முடியும் என வாதிட்டார். இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்