SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

2019-03-25@ 14:24:20

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கொடுக்க முன்வராத நிலையில், ஒருவர் மட்டும் தைரியத்துடன் நடந்தவை பற்றி தன்னுடைய வீட்டில் எடுத்துக்கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தேவையான ஆதாரங்களை திரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அறிந்த பார் நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் புகார் கொடுத்த இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தாக்குதலில் ஈடுபட்ட பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் பெண்களை மிரட்டி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பம் முதலே இந்த வழக்கில் சிக்காமல் தலைமறையாக இருந்து வந்த மணிகண்டன் கடந்த 13ம் தேதியன்று, ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான்.

தலைமறைவாக மணிகண்டனை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கோவை நீதிமன்றத்தில் இன்று மணிகண்டன் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டதாக கோவை மாவட்ட எஸ்பி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்