SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்வரத்து முற்றிலும் நின்றதால் பெரியாறு அணை 113.20 அடியாக சரிவு

2019-03-25@ 13:07:45

கூடலூர்:  முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதாலும் பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  தென் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை ஏமாற்றியதால், இந்த ஆண்டு துவக்கம் முதல் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் அணையின் நீர்மட்டம் நேற்று 113.20 அடியாக குறைந்துள்ளது. அத்துடன் அணைக்கு நீர்வரத்தும் இல்லை. மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 1426 மில்லியன் கனஅடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை.

அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 1666 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 112.50 மில்லியன் கனஅடியாக உள்ளது. 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின்  நீர்மட்டம் நேற்று 93.64 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 53.27 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழை எங்கும் பதிவாகவில்லை.

இன்னும் 9 அடி மட்டுமே...

பெரியாறு அணையின் கொள்ளவு 152 அடியாக இருந்தாலும், அணையின் கிடப்புநீரான (டெட் ஸ்டோரேஜ்) 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழக பயன்பாட்டிற்கு கொண்டுவரமாறு சுரங்க வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்து தென்மேற்கு பருவமழை தெடங்கும் ஜூன் வரை அணையில் இருந்து இனி 9 அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு எடுக்க முடியும். விரைவில் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழைபெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் விரைவில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்