SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் தாக்கி 128 நாட்களுக்கு மேலாகியும் நிவாரணம் கிடைக்காததால் அழியும் நிலையில் மீன்பிடி தொழில்

2019-03-25@ 12:25:47

சேதுபாவாசத்திரம்: கஜா புயல் தாக்கி 128 நாட்களுக்கு மேலாகியும் நிவாரணம் கிடைக்காததால் அழிந்து போகும் நிலையில் மீன்பிடி தொழில் உள்ளதால் வெளிமாவட்டங்களுக்கு வேலைத்தேடி சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் செல்கின்றனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள், விசைப்படகுகள், பைபர் படகுகள் சேதமடைந்தன. பல படகுகள் அலையின் சீற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்குள் மூழ்கியது. மேலும் மீன்பிடி வலைகளும் சேதமடைந்தன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 128 நாட்களுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் 247 விசைப்படகுகள் இருந்தன. இவற்றில் 54 படகுகள் பகுதி சேதமடைந்தன. 188 படகுகள் முழுமையாக சேதமடைந்தது. தமிழக அரசு பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது. முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. பகுதி சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. இதில் சில விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக செலவான தொகையை தங்கள் கையில் உள்ள பணத்தை போட்டு பகுதி சேதமடைந்த 54 படகுகளையும் பழுதுநீக்கி கடலுக்கு தொழிலுக்கு சென்று வருகின்றனர்.  

முழுமையாக சேதமடைந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. மேலும் நிவாரண தொகையை மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கூட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது முதல் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தில் பழைய படகு கூட வாங்க முடியாது. புதிய படகு வாங்க ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் நிவாரணத்தை உயர்த்தி வழங்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தனர். ஆனால் மீனவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறி அரசு சமாதானம் மூலம் மீனவர்கள் போராட்டகளை கைவிட வைத்தது.  

பின்னர் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் முழு சேதமடைந்த 54 விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை வங்கி கணக்கில் அரசு செலுத்தியது. ஆனால் 128 நாட்களுக்கு மேலாகியும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 134 விசைப்படகுகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணத்தை உயர்த்தி வழங்ககோரி சேதுபாவாசத்திரம் மீனவர்களும் பணத்தை எடுத்து படகு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் மற்றும் மீனவ தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. படகுகள் இன்றி மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேநிலை நீடித்தால் தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீன்பிடி தொழில் முற்றிலுமாக அழிந்து விடும் என்று மீனவர்கள்
தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

  • chicagosnow

    பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்