SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5,970 வழக்கறிஞர்கள் வாதாட பார் கவுன்சில் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

2019-03-25@ 11:58:14

சென்னை : சேமநல நிதியை செலுத்தாத வழக்கறிஞர்கள் வாதாட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேமநல நிதியை செலுத்தாத 5,970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து கடந்த 22ம் தேதி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் சேமநல நிதி செலுத்த வேண்டும் என்பது 1993ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. 1993க்கு முன்னர் பதிவு செய்தவர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா கட்ட வேண்டும்.

1993ம் ஆண்டுக்கு பின்னர் பார் கவுன்சிலில் பதிவு செய்பவர்களுக்கு வாழ்நாள் சந்தாவாக சேமநல நிதி வசூலிக்கப்படுகிறது. இந்த நிதித் திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்கள் அனைவரும் பார் கவுன்சிலின் இந்த நலத் திட்டதின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் பார்கவுன்சில் விதிப்படி, நல நிதிக்கான சந்தாவை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

அப்படி சந்தா கட்ட தவறியவர்கள் விடுபட்ட சந்தா கட்டணங்களோடு, ஆயுட்கால சந்தாவுக்கான தொகையை செலுத்த பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை திரும்ப செலுத்தாத 5970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும் சந்தா கட்டணத்தை செலுத்தும் வரை நீதிமன்றங்களில் ஆஜராக கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் 5,970 வழக்கறிஞர்கள் வாதாட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5,970 பேருக்கு தடை விதித்துள்ளதால், ஆயிரக்கணக்கான வழக்குகளின் விசாரணை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்