SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார்: யோகி ஆதித்யநாத்

2019-03-25@ 11:37:13

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ‌ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்குகளை கடைப்பிடித்தார்கள் என்று தெரிவித்தார். இதனால் தான் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தது என்று கூறினார். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர் எனவும் கூறினார். ஆனால் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவரான சாமிபிட்ராடோ இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் வெறுப்பாக பார்க்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். இது போன்ற நபர்களால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்படுகிறது என்று கூறினார். பொறுப்பற்ற முறையில் அவருடைய நடவடிக்கை உள்ளது எனவும், அவர் பயங்கரவாதி மவுத் அசாரை பாகிஸ்தானில் வைத்து சந்தித்து உள்ளார் எனவும் கூறினார். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நபராக சாம்பிட்ராடோ திகழ்ந்து வருகிறார் எனவும் யோகி ஆதித்ய நாத் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்