SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.36 கோடி பறிமுதல்

2019-03-25@ 10:15:57

ஹைதராபாத் : ஆந்திராவில் இருந்து சட்டையில் மறைத்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரூ.1.36 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் சட்டையில் மறைத்து கட்டுக்கட்டாக பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த ரூ.1.36 கோடியை பறிமுதல் செய்த போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாட்ஷா,ஸ்ரீனிவாசலு,ஆஞ்சிநேயலு மற்றும் ஷேக்ஸ்சலீம் என்பது தெரியவந்தது. பணத்தை தேர்தல் செலவுக்காக கடத்தி வந்தார்களா அல்லது ஹாவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் திருநீர்மலைப்பகுதியில் தீவிர சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.72 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்