SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை எங்கள் பலத்தை காட்டவே இடைத்தேர்தலில் போட்டி: சத்துணவு, அங்கன்வாடி சங்கம் திடீர் அறிவிப்பு

2019-03-25@ 01:33:35

சென்னை: எங்கள் கோரிக்கை நிறைவேறாததால் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளோம் என்று சத்துணவு, அங்கன்வாடி சங்கம் திடீரென அறிவித்துள்ளது.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: அரசு துறைகளில் கொத்தடிமைகளாக பல ஆண்டு காலமாக பணியாற்றி வரும் அரசின் திட்டத்தை அமல்படுத்தும் அடித்தள பணியாளர்களாகிய சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர், பம்ப் பிட்டர், பணியிழந்த மக்கள் நல பணியாளர்கள், துப்புறவு தொழிலாளர்கள், கிராம கோயில் அர்ச்சகர்கள், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்ற மகளிர் ஊர்நல அலுவலர், தொகுதி மேற்பார்வையாளர்களின் கோரிக்கைகளை இதுநாள் வரை கண்டு கொள்ளாத அவநிலையை நீக்கிட பல முறை வாதாடியும், போராடியும் பயன் இல்லை.  

அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் எங்களுக்கு எந்தவித வாக்குறுதி இல்லை. எனவே எங்களது வாக்கு வங்கியை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்தும் வகையில் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம். வேட்பாளர் அறிமுக கூட்டம் தஞ்சை தமிழ்நாடு ஒட்டலில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்