SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை தினத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பழிவாங்குகிறதா அரசு?: கொந்தளிக்கும் சங்கங்கள்

2019-03-25@ 01:33:33

சென்னை : கடந்த காலத்தில் பள்ளி நாட்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஆனால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு பிறகு விடுமுறை நாளில் பயிற்சி வகுப்பு நடத்தி ஆசிரியர்களை அரசுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, மூன்று தேர்தல் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட தமிழகத்தின் பல மாவட்டத்தில் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்புகள் நடத்தப்படுவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு, 220 நாட்கள் வேலை நாட்கள் ஆகும். தற்போது உள்ளூர் விடுமுறை போன்ற நாட்களில் சனிக்கிழமை வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை உள்ளது.ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான், விடுமுறை என்ற நிலையில், அந்த நாளிலும், தேர்தல் வகுப்புகளுக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கெடுபிடி உத்தரவு பிறப்பிக்கின்றனர். கடந்த கால சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வகுப்புகள் அனைத்தும், பள்ளி வேலை நாட்களில் தான் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. அரசு பழைய சம்பவங்களை மனதில் வைத்து எங்களை பழி வாங்குவதாக நினைக்கிறோம்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்