SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளை பறக்கும் படையை தாக்க முயன்ற அதிமுக பிரமுகரை தப்பவிட்ட போலீஸ்: டிரைவர் கைது கார் பறிமுதல்

2019-03-25@ 01:33:33

சென்னை: நொளம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தாக்க முயன்ற அதிமுக பிரமுகரை போலீசார் தப்பவிட்டனர். அதற்கு பதிலாக அதிமுக பிரமுகரின் டிரைவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், நொளம்பூர், முகப்பேர் மேற்கு போலீஸ் பூத் அருகே நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பத்மநாதன் மற்றும் நொளம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அதிமுக கட்சி கொடியுடன் ஒரு கார் வந்தது.அந்த காரை பறக்கும் படை போலீசார் வழிமறித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கி வந்த முகப்பேர் மேற்கு தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் தேவநீதி (49) தேர்தல் அதிகாரி பத்மநாதனை பார்த்து ‘என் வாகனத்தை  ஏன் வழிமறித்தீர்கள். என் காரில் சோதனை போடுவீர்களா.

நான் யார் தெரியுமா’ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தேர்தல் அதிகாரியை தாக்க பாய்ந்தார். உடனே அங்கிருந்த நொளம்பூர் போலீசார் அதிமுக பிரமுகர் தேவநீதியை சமரசம் பேசி தனியாக அழைத்து சென்று தப்பிக்க விட்டனர். இதையடுத்து, கார் டிரைவரான முகப்பேரை சேர்ந்த தர் (40) என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.பிறகு போலீசார் காரை காவல்நிலையம்கொண்டு சென்று டிரைவர் தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அனால், காரில் பணம் அல்லது பொருட்கள் எதேனும் சிக்கியதா என்று கூற மறுத்து விட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்