SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு: 2 படகுகளும் பறிமுதல்

2019-03-25@ 01:25:42

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவு மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை  தாண்டியதாக குற்றம் சாட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகேசன், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோஸ்வா ஆகியோருக்கு சொந்தமான படகுகளை பறிமுதல் செய்து படகில் இருந்த இருளப்பன், பால்ராஜ் உட்பட 11 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.  மீனவர்கள் 11 பேரும் காரை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அதிகாரிகளின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி வீட்டில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வேறு பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பிய மீனவர்கள் வலையில் குறைந்தளவு மீன்களே இருந்தது. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அவர்கள் கவலை  தெரிவித்தனர். மீனவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை ஏற்கனவே பறிமுதல் செய்துள்ள படகுகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது இரண்டு படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனால்  எங்களின் வாழ்வாதாரமே போய் விட்டது. தேர்தல் நெருங்கும் வேளையில் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ள 11 மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’  என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்