SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற 3 பேர் மீது கொடூர தாக்குதல்: 9 பேர் கைது

2019-03-25@ 01:25:41

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்தவர்கள் மீது, பயங்கர தாக்குதல் நடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம், செய்யாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் மர்ம நபர்கள் சிலர், 2 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த ஓதலவாடி கிராமத்தை சேர்ந்த  இளங்கோவன், ராஜசேகர், ராமதாஸ் ஆகிய 3 பேரும் அங்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது மணல் அள்ளியவர்களுக்கும், இளங்கோவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சுமார் 25 பேர் வந்தனர். அவர்கள் கம்பு மற்றும் கத்தியால் இளங்கோவன் உள்ளிட்ட 3 பேரையும் பயங்கரமாக தாக்கினர். இதில் ராஜசேகர், ராமதாஸ் ஆகியோர் படுகாயம்  அடைந்தனர். இளங்கோ லேசான காயங்களுடன் தப்பினார்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த கிராம மக்களை பார்த்ததும், மணல் கடத்தல் கும்பல் தப்பியோடியது. படுகாயம் அடைந்த 2 பேரும், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து நள்ளிரவு 1 மணியளவில் எஸ்பி சிபி சக்கரவர்த்தி ஓதலவாடி கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின்பேரில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும்  ஓதலவாடி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்