SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமக ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு 90% தேமுதிக நிர்வாகிகளுக்கு திமுக கூட்டணியில் விருப்பம்: தேமுதிக மாவட்ட செயலாளர் பேச்சு

2019-03-25@ 01:25:37

வானூர்:  விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்  நடந்தது. இதில் வானூர், கிளியனூர் ஒன்றியங்களை சேர்ந்த கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசி விட்டு சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வானூர் தொகுதி எம்.எல்.ஏ சக்கரபாணி பேசுகையில், பா.ம.க, தே.மு.தி.க கட்சிகளுக்கு அதிமுகதான் அங்கீகாரம் வாங்கிக்கொடுத்தது. வானூர் தொகுதியில் மட்டும் பா.ம.க வேட்பாளர் 60 ஆயிரம் வாக்குகள்  அதிகம் பெறுவார். ஆனால் வேட்பாளராக நிற்கின்ற பா.ம.க நிர்வாகிகள் விருந்தாளிகள் போல் உள்ளனர். அவர்கள்தான் எங்களை வாக்குசேகரிக்க அழைத்து செல்லவேண்டும். அ.தி.மு.க சிறப்பாக செயலாற்றும் அதனை பா.ம.க  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதனால், பாமக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, பதிலுக்கு பேசிய தே.மு.தி.க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ``90 சதவீத நிர்வாகிகள் தி.மு.கவுடன்தான் கூட்டணி சேரவேண்டும் என்று சொன்ன போதும்  விஜயகாந்த் எம்.ஜி.ஆர் மீது ெகாண்ட பற்றின் காரணமாக, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளார்’’ என்று பதிலடி கொடுத்தார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்