SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘அவங்களை தூக்குங்க ஆபீஸர்...’

2019-03-25@ 01:25:36

ஐந்து வருடம் அத்தனை சொகுசுகளையும் ஆண்டு, அனுபவித்துவிட்டு, அடுத்த தேர்தலில் சீட்டு இல்லை என்றதும், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அடுத்த திண்ணை தேடிச் சென்றால்... கோபம் வருமா,  இல்லையா? ஒடிசா மாநில ஆளும்கட்சி நிர்வாகிகள் அப்படி ஒரு கோபத்தில் தகித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு நான்கு கட்டங்களாக (ஏப். 11, 18, 23, 29) தேர்தல் நடக்க இருக்கிறது. பிஜேடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது. சிட்டிங் எம்எல்ஏ, எம்பிகள் பலருக்கும் இம்முறை சீட்டு வழங்கப்படவில்லை. ‘மக்கள் சேவையாற்ற’ மறுபடியும் வாய்ப்புத் தராத அதிருப்தியில் பிஜேடி கட்சியின்  சீனியர் நிர்வாகிகள் மனம் குமைந்து கொண்டிருந்தனர்.

‘வீசுடா வலைய...’ என்று பாஜ கட்சியினர் விரித்த வலையில், பிஜேடி நிர்வாகிகள் பலரும் போய் விழுந்தனர். திரிநாத் கொமாங்கோ (குனுப்பூர் தொகுதி), தெபராஜ் மொகந்தி (அஸ்கா), புர்னா நாயக் (தாஸ்பல்லா), சுகந்தா நாயக்  (நிலாகிரி), பஸந்தி மாலிக் (மோகனா தொகுதி) ஆகிய ஐந்து எம்எல்ஏக்களும் பிஜேடிக்கு குட்-பை சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.இன்னும் சிலரும் அதிருப்தியில் இருப்பது தெரிந்து உஷாராகி விட்டார் கட்சித் தலைவர் நவீன். விளைவு... ஐந்து எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கைக்கு தயாராகிறார்கள். ‘கட்சி மாறிய ஐந்து எம்எல்ஏக்கள் மீதும் கட்சி தாவல் பிரிவின் கீழ் தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சபாநாயகர் பிரதிப்குமார் அமத்தை  சந்தித்து புகார்மனு கொடுத்து விட்டு வந்திருக்கிறார் பிஜேடி கட்சியின் தலைமை கொறடா அமர் பிரசாத் சத்பதி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்