SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சியில் சேர்ந்த 3 நாளில் எம்.பி சீட்: ம.பி. பாஜ தாராளம்

2019-03-25@ 01:25:34

மத்திய  பிரதேச மாநில காங்கிரசில் இருந்து விலகி மூன்று நாட்களுக்கு முன் பாஜ.வில்  இணைந்த ஹிமாதாரி சிங்கிற்கு சாதோல் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு  வழங்கி தாராளம் காட்டியிருக்கிறது பாஜ.மத்தியப் பிரதேச மாநில மறைந்த  காங். மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான தல்பீர் சிங் மற்றும் முன்னாள்  எம்.பி., ராஜேஷ் நந்தினி சிங் தம்பதியின் மகள் ஹிமாதாரி சிங். காங்கிரஸ்   குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு  கடந்த 2016 சாதோல் மக்களவை இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இவர்  பாஜ வேட்பாளர் கியான்சிங்கிடம் தோல்வியடைந்தார்.இதன் பின்னர் கடந்த  2017ம் ஆண்டு பாஜ பிரமுகர் நரேந்திர சிங் மாராவியை, ஹிமாதாரி சிங்  திருமணம் செய்த கொண்டார். இருந்தபோதும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே  இருந்தார். வரும் மக்களவை தேர்தலில்  போட்டியிட காங்கிரசில் சீட்டு கேட்டார்.  ஆனால் 2018 ம.பி சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜ சார்பில் போட்டியிட்ட தனது  கணவருக்கு ஆதரவாக இவர் பிரசாரம் செய்ததால் கடுப்பில் இருந்த காங்கிரஸ்  கட்சி இவரது  கணவர்  நரேந்திர சிங் மாராவியை பாஜவிலிருந்து வெளியேற்றி  காங்கிரசில் சேர்த்தால் தான் சீட்டு என கண்டிஷன் போட்டது.

இதனால், ஆத்திரமடைந்த   ஹிமாதாரி சிங் கடந்த வியாழக்கிழமை  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜ  தலைவர் ராகேஷ் சிங்கை போபாலில் சந்தித்து தன்னை பாஜகவில்  இணைத்துக்கொண்டார். காங்கிரஸ்  பராம்பரியத்தை கொண்ட ஹிமா பாஜவில் இணைந்தது  மபி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  சாதோல் தொகுதி பாஜ வேட்பாளராக ஹிமாதாரி சிங்கை அறிவித்து பாஜ மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கட்சியில் சேர்ந்த 3 வது நாளில் எம்.பி சீட்டா  என அரசியல் வட்டாரங்கள்  ஆச்சர்யப்படுகின்றன.  ஆனால் பாஜக பலமான இந்த  தொகுதியில் கட்சியின் விசுவாசமான தொண்டர்களுக்கு சீட் கொடுக்காமல் நேற்று  வந்தவர்களுக்கெல்லாம் சீட்டா என்று தொண்டர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்