SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தல் முடிவில் மிகப்பெரிய பிராந்திய கட்சியாக பஞ்சாப் ஏக்தா உருவெடுக்கும்: சுக்பால் கெய்ரா நம்பிக்கை

2019-03-25@ 01:12:55

மக்களவை தேர்தல் முடிவில் பஞ்சாப்பில் மிகப்பெரிய பிராந்திய கட்சியாக பஞ்சாப் ஏக்தா கட்சி உருவெடுக்கும் என அதன் தலைவர் சுக்பால் கெய்ரா கூறினார்.பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த காலத்தில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சுகிந்தர்சிங். அகாலி தள அரசில் கல்வி அமைச்சராகவும் இருந்தார். அவரது  மறைவுக்கு பின், அவரின் மகனான சுக்பால் கெய்ரா பஞ்சாப் ஏக்தா கட்சியை தொடங்கினார். பிராந்திய கட்சியாக வளர்ந்து வரும் பஞ்சாப் ஏக்தா கட்சி, நடப்பு நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜ-அகாலிதளம்  கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியுள்ளது. இப்போட்டி தொடர்பாக கட்சித்தலைவர் சுக்பால் கெய்ரா அளித்த பேட்டி: பத்திண்டா தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதன் மூலம் அகாலி தள எதிர்ப்பு ஓட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். அதனால், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியால் முடியாமல் போகும்  நிலை உருவாகியுள்ளதே? பஞ்சாப் அரசியலில் பாதல் குடும்பமும், முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் குடும்பமும் பெரிய சக்தியாக இருக்கிறது. அவர்கள் கடுமையான போட்டியை எனக்கு கொடுப்பார்கள். அகாலிதளம் எதிர்ப்பு ஓட்டுகளை பெற்றிடுவேன்.  மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெற்றி பெறப் போவதில்லை. எனக்கு வெற்றி கிடைக்குமோ, இல்லையோ. அவர்களை எதிர்த்து களம் இறங்கியிருக்கிறேன்.

மக்களின் ஆதரவு பாஜ - அகாலிதளம் கூட்டணி, காங்கிரஸ் கட்சியை மீறி உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறீர்களா?எனது பிரசாரமே, பாதல் மற்றும் கேப்டன் அமரீந்தர்சிங் ஆட்சி தேவையில்லை என்பது தான். இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டனர்.  பாகிஸ்தானில் ஷெரீப் மற்றும் பூட்டோ குடும்பம் மாறி மாறி ஆட்சியை நடத்தியது. தற்போது, இம்ரான்கான் புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லையா. அதுபோல் தான், பஞ்சாப்பிலும் மாற்றம் ஏற்படும்.பஞ்சாப் ஏக்தா கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்? மாநிலத்தில் பிராந்திய கட்சியாக விளங்கிய அகாலிதளம் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி 26 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதனால், இந்த மக்களவை தேர்தல்  முடிவில் எங்களது பஞ்சாப் ஏக்தா கட்சி மிகப்பெரிய பிராந்திய கட்சியாக உருவெடுக்கும். மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகளவு இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்