SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி

2019-03-25@ 00:58:51

பெரம்பூர்: ெபரம்பூர் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று காலை நடந்தது.இதில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்வது, ஓட்டு இயந்திரம் பழுதடைந்தால் எப்படி சரி செய்வது,  யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் கருவியை எப்படி கையாள்வது ஆகியவை குறித்து விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திவ்யதர்ஷினி, கருணாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தனியார் விடுதி மற்றும் திருமண மண்டபம் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் பற்றி விளக்கப்பட்டது. குறிப்பாக திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தனியார் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி வேட்பாளர் ஏதும் பிரசாரம் செய்யக்கூடாது. வெளி ஊர்களில் இருந்து வருபவர்களை விடுதியில் தங்க  வைக்கக்கூடாது. விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்