SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நள்ளிரவில் சுவரை துளையிட்டு டாஸ்மாக் கடையில் 4.75 லட்சம் கொள்ளை: காவல் நிலையம் அருகே துணிகரம்

2019-03-25@ 00:58:45

புழல்: செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ₹4.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் ஊழியர்கள் 5 பேரிடம் கிடுக்கிப்பிடி  விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம் காவல் நிலையம் மற்றும் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜிஎன்டி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையை ஒட்டி மது பாரும் இயங்கி வருகிறது. டாஸ்மார் கடையில் சூப்பர்வைசராக செங்குன்றம்  பாலாஜி நகரை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையில் விற்பனையான தொகை ₹4.75 லட்சம் பணத்தை விஜயகுமார் கடையில் வைத்துவிட்டு ஷட்டர்களை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று மதியம் 12 மணியளவில் கடையை திறந்து பார்த்தபோது கடை சுவற்றில் ஆட்கள் உள்ளே செல்லக்கூடிய வகையில் துளைபோடப்பட்டு இருந்தது. மேலும் பார் வழியாகவும் துளை போடப்பட்டு இருந்தது. உள்ளே சென்று  பார்த்தபோது கல்லாவில் இருந்த ₹4.75 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே விஜயகுமார் இதுகுறித்து அருகில் உள்ள செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.தகவலறிந்து செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு  தடயங்கள் சேகரிக்கப்பட்டன.மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரில் வேலை செய்யும் 5 ஊழியர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை உள்ள போதிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் கடையின் சுவரை துளைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்