SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9வது வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் வெளியிட்டது : இதுவரை 227 தொகுதிக்கு அறிவிப்பு

2019-03-25@ 00:58:41

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான 9வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 38 வேட்பாளர்கள் கொண்ட 8வது பட்டியல் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், 10 வேட்பாளர்கள் கொண்ட 9வது பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில், தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி  சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பீகாரில் 3 தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் 4 தொகுதிக்கும், ஜம்மு காஷ்மீர், கர்நாடகாவில் தலா ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. 28 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிக்கான வேட்பாளர்கள் நேற்று  முன்தினம் அறிவிக்கப்பட்டனர். பெங்களூர் தெற்கு, தார்வார் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய 9வது பட்டியலில் பெங்களூர் தெற்கு தொகுதிக்கு ஹரிபிரசாத்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவை தேர்தலுக்கு இதுவரை 227 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்