SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் பலி

2019-03-25@ 00:44:38

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது  இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரியில் நடத்திய தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த வியாழன்று, சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய  தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஜனவரி தொடங்கி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இதுவரை 125 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெர்னி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதில்  தாக்குதல் நடத்தியது. நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் காலை 4 மணிக்கு இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்