SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த மாணவர்கள் கைது

2019-03-25@ 00:24:12

சென்னை: தி.நகரில் இருந்து மாநகர பஸ் (த.எ.147) கடந்த 22ம் தேதி மாலை, அம்பத்தூர் நோக்கி புறப்பட்டது. தி.நகர் திருமலைபிள்ளை சாலை, வாணி மஹால் பேருந்து நிறுத்தம் அருகே பஸ் சென்றபோது, மொபட்டில் வந்த 2 வாலிபர்கள், பேருந்து முன்பு மொபட்டை நிறுத்தி டிரைவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர், அங்கு கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதை பார்த்த பயணிகள், பேருந்தில் இருந்து அலறியுடித்து கொண்டு வெளியேறினர். அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார், 2 வாலிபர்களையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பின்னர், பேருந்து டிரைவர் சாஜெயின் ஜோஸ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தினர். அதில், கடலூர் மாவட்டம் திருப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (25), லோகேஷ் (21) என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தாததால் ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு சொத்தை சேதப்படுத்தியது, அரசு ஊழியரை பணி ெசய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 கல்லூரி மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்