SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவுக்கு 285 ரன் இலக்கு

2019-03-25@ 00:23:48

ஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 285 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 115 ரன் (126 பந்து, 11 பவுண்டரி) விளாசினார்.

சஹான் மசூத் 19, ஹரிஸ் சோகைல் 34, உமர் அக்மல் 16, கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன் (61 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), பாஹீம் அஷ்ரப் 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இமத் வாசிம் 19*, யாசிர் ஷா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சன், கோல்டர் நைல் தலா 2, நாதன் லயன், ஆடம் ஸம்பா, ஆரோன் பிஞ்ச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்