SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணிடம் ஆபாச படம் காட்டி தொழிலதிபர் சில்மிஷம்: போலீஸ் பிடியில் சிக்கினார்

2019-03-25@ 00:23:46

சென்னை: மும்பையில் இருந்து ஒரு தனியார் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நேற்று அதிகாலை 1 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ராகேஷ் (56) என்பவர் தொழில் விஷயமாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அவரது சீட்டின் பக்கத்து இருக்கையில் சுமார் 30 வயது டைய சென்னையை சேர்ந்த பெண் பயணி கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். விமானம் பறந்தபோது, தொழிலதிபர் ராகேஷ், தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனை வேண்டுமென்றே பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் பயணியை நோக்கி திருப்பி காட்டினார். இதில் அதிர்ச்சியான அந்த பெண், தனது முகத்தை மறுபக்கமாக திருப்பி கொண்டு, தனது சீட்டின் ஓரமாக ஒதுங்கினார். எனினும், அந்த பெண்ணை தொட்டு சீண்டுவது உள்ளிட்ட பல்வேறு பாலியல் தொல்லைகளை தொழிலதிபர் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் தொழிலதிபரின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதுகுறித்து
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோதே அப்பெண் பயணி விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள் தொழிலதிபரை கண்டித்தனர். மேலும், அப்பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றி அமரச்செய்தனர். இச்சம்பவம் குறித்து தலைமை விமானிக்கும் பணிப்பெண்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பயணியிடம் விமானி விசாரித்தார். கைக் குழந்தையுடன் பயணம் செய்யும் தன்னிடம் தொழிலதிபர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

எனவே, அவர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பயணி வலியுறுத்தினார். இதையடுத்து விமானி, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகார்கள் தயாராக இருக்கும்படி தகவல் கொடுத்தார். அதன்படி  மும்பை விமானம் சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்து  இறங்கிய தொழிலதிபர் மற்றும் பெண் பயணி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னை விமான நிலைய போலீசில் நிலையத்தில் கொண்டு போய் விட்டனர்.  விமான நிலைய போலீசார் விசாரித்தனர். பெண் பயணி வீட்டுக்கு சென்றுவிட்டு நாங்கள் விசாரணைக்கு அழைக்கும்போது வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர் தொழிலதிபரை மட்டும் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வைத்திருந்ததனர் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் தொழிலதிபரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் அந்த பெண்ணை விசாரணைக்கு தொலைபேசியில் அழைத்தனர். ஆனால் அந்தப் பெண், நான் மீண்டும் காவல் நிலையத்துக்கு வர விரும்பவில்லை. அவரை எச்சரித்து அனுப்பிவிடுங்கள். அவர் மீது வழக்கு தொடர விரும்பவில்லை என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்