SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிரா கிராமத்தில் அதிசயம் பசியைப் போக்க கோழிகளைத் தின்னும் பசு

2019-03-25@ 00:23:39

புல்தானா: பசுக்கள் தாவரப்பட்சினி என்று நினைத்திருந்தால், இனி அந்த நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். மகாராஷ்டிராவின் நந்தூரா தாலுகாவில் உள்ள தகர்கேட் கிராமத்தில் வசித்துவரும் விவசாயி பராஸ் லோனாக்ரே ஒரு பசுவை வளர்த்து வருகிறார். அந்த பசு கோழிகளையே விரும்பி சாப்பிடுகிறது. பசுவுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது கோழியை சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக் கொள்வதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள். இந்த பசு கோழிகளை துரத்திச் சென்று அவற்றை பிடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் இப்போது வைரலாகி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அங்குள்ள சந்த்பூர் என்ற கிராமத்தில் அடிக்கடி கோழிகள் காணாமல் போனது. நாய்கள்தான் அதைப் பிடித்து சாப்பிட்டிருக்கும் என்று கிராமவாசிகள் சந்தேகித்தனர். ஒரு விவசாயி தன் வீட்டருகே மாட்டுத் தொழுவம் மற்றும் கோழிகளை அடைத்து வைக்கும் இடமும் கட்டியிருந்தார். அவருடைய கோழிகள் திடீர் திடீர் என்று காணாமல் போனது. இதைத் தொடர்ந்து அந்த விவசாயியும் குடும்பத்தினரும் இரவு நேரத்தில் கண்காணிக்க திட்டமிட்டனர். அப்போது இரவு நேரத்தில் தொழுவத்தில் இருந்த கன்று ஒன்று, கோழிகள் இருக்கும் பகுதிக்குள் நைசாக நுழைந்து கோழி ஒன்றை பிடித்து சாப்பிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனினும் கோழிகள் காணாமல் போனது எப்படி என்பதற்கு அப்போது பதில் கிடைத்து விட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்