SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி 2வது முறையாக பிரதமராக 500 பெண்கள் சனி யாகம்

2019-03-25@ 00:23:38

சூரத்: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று வேண்டி சூரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் இரு நாட்கள் ‘சனி யாகம்’ நடத்தினர். குஜராத் மாநிலம் முழுவதும் கோயில்களில் மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனைகள், யாகங்களை பாஜ நடத்தி வருகிறது. சூரத்திலுள்ள தப்தி ஆற்றின் படுகையில் கபோதரா சித்தாகுபீர் என்ற இடத்தில் 532 பெண்கள் நேற்று கூடி சிறப்பு சனி யாகம் நடத்தினர். முன்னதாக மாற்றுத் திறனாளி மாணவர்களை ஒன்று திரட்டி அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

சனி யாகம் குறித்து ஏற்பாட்டாளரான நரேந்திர மோடி விகார் மஞ்ச்சை சேர்ந்த மாநில செயலாளர் ரேகா ராவல் கூறுகையில், ‘‘நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்காக கடவுள் சனியின் ஆசீர்வாதத்தை பெற நேற்று முன்தினம் துவங்கி இரு நாட்கள் தொடர்ந்து யாகம் நடத்தினோம். இதற்காக ஹரித்துவார் காசி சக்தி பீடத்திலிருந்து சுவாமி விஜயானந்தஜி மகராஜ் வந்திருந்தார். 108 சனி மகா யாகம் எதிரிகளின் வியூகத்தை முறியடித்து கடவுளின் ஆசியுடன் மீண்டும் மோடியை பிரதமராக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் நாடு மீண்டும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்