SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎம்எப் தகவல் இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு

2019-03-25@ 00:17:16

புதுடெல்லி: உலக அளவில் இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக திகழ்கிறது என, ஐஎம்எப் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர் மாநாடு நேற்று நடந்தது. இதில் சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தகவல் தொடர்பு இயக்குநர் ஜெரி ரைஸ் கூறியதாவது:வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.   இந்த வளர்ச்சி  நிலைத்திருக்க வேண்டுமானால் மேலும் பல சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம்  இந்திய பொருளாதார வளர்ச்சி இதே நிலையில் நீடிக்க வழி வகுக்கும். அடுத்த மாதம் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் நடக்கிது. அப்போது, உலக பொருளாதாரம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும். இதில், இந்திய பொருளாதார நிலை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்