SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 5.5 சதவீதம் சரிவு: வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

2019-03-25@ 00:17:13

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரை தங்கம் இறக்குமதி 2,950 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட குறைவு. வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் தங்கம் இறக்குமதி 2,950 கோடி டாலருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் இது  3,120 கோடி டாலராக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 5.5 சதவீதம் சரிந்துள்ளது.
 சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு காரணமாக இறக்குமதி குறைந்திருக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான 3  மாதங்களில் தங்கம் இறக்குமதி தொடர் சரிவை சந்தித்தது. ஜனவரி மாதம் இறக்குமதி 38.16 சதவீதம் உயர்ந்து 231 கோடி டாலரானது. ஆனால் பிப்ரவரி மாதம் 10.8 சதவீதம் குறைந்து 258 கோடி டாலர் மதிப்பிலான தங்கம்  மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 சீனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் 2வது நாடாக இந்தியா உள்ளது. இங்கு பெரும்பாலும் ஆபரண தேவைக்காகவே தங்கத்தை இறக்குமதி செய்கின்றனர். இவை, உள்ளூர் தேவை தவிர,  ஆபரணமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறக்குமதி சரிந்ததால், நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட 11 மாதங்களில் (ஏப்ரல் - பிப்ரவரி) தங்கம் ஏற்றுமதியும் 6.3 சதவீதம் சரிந்து 2,850 கோடி டாலராக உள்ளது. இதன்மூலம் வர்த்தக  பற்றாக்குறை மொத்த 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறை முந்தைய ஆண்டில் 1.1 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதேநேரத்தில் அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 22.43 சதவீதம் உயர்ந்து 955.16 டன்களாக  உள்ளது. தென்ெகாரியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுவும் இறக்குமதி சரிய ஒரு காரணமாக அமைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்