SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரெடிட் ஸ்கோர் வரலையா? இதுவும் கூட காரணமாகலாம்

2019-03-25@ 00:17:12

புதுடெல்லி: மொபைல் போனுக்கு  தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால், பெரும்பாலும் வீடு வாங்கறீங்களா, பர்சனல் லோன் வேணுமா என்பதாகத்தான் இருக்கும். ஆனால் கடன் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோர்தான். அதுதான் உங்கள் ஜாதகம். அதெல்லாம் எங்களுக்கு தெரியும்... சிபில் கொடுக்கிற கிரெடிட் ஸ்கோர்தானே என்கிறீர்களா? சிபில்  ஸ்கோர் மட்டுமின்றி வேறு சில விஷயங்களையும் கடன் கொடுக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆராய்கின்றன. அவை வருமாறு:. சிபில் ஸ்கோர்தான் உங்களுக்கு கடன் கொடுப்பதை முடிவு செய்ய வங்கிகள் பார்க்கும் முதல் விஷயம். கிரெடிட் கார்டு நிலுவைகளை கட்டியிருக்க வேண்டும். தவறினால் சிபில் ஸ்கோர் எகிறிவிடும். இதுபோல் ஏற்கெனவே  கடன் வாங்கி முறையாக இஎம்ஐ கட்டாவிட்டால், அல்லது கட்டாமல் ஏமாற்றி விட்டாலும் சிபில் ஸ்கோர் காலை வாரிவிடும். நிலையாக ஒரு வேலையில் இருப்பவரை நம்பித்தான் கடன் கொடுப்பார்கள். அடிக்கடி வேலையை மாற்றுபவராக இருந்தால் கடன் கொடுக்க தயக்கம் வந்து விடும். கடன் கேட்டு விண்ணப்பித்து, கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும்  அடிக்கடி வேலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும்.

 ஒவ்வொரு வங்கியிலும் குறைந்த பட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் வசூலிப்பார்கள். அவ்வளவுதானே, அபராதம் கட்டினால் போச்சு என நினைக்காதீர்கள். குறைந்த பட்ச இருப்பு கூட  பராமரிக்க முடியாதவர்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பது  இரண்டாம் பட்சம்தான். பிராட்பேண்ட், லேண்ட்லைன், போஸ்பெய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் உரிய நேரத்தில் கெடு தேதிக்கு முன்பாகவே பில் தொகையை செலுத்தவிட வேண்டும். மின்சார பில் போன்றவற்றுக்கும் இது பொருந்தும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. தொட்டதற்கெல்லாம் ஆன்லைன் பேமன்ட்தான் ஆனால், எந்த வகையான பேமன்ட்களை செலுத்துகிறீர்கள், எப்படி செலவு செய்கிறீர்கள் என்பதெல்லாம் கூட, கடனுக்கு  தகுதியானவரா என்பதை வங்கிகள் முடிவு செய்வதற்கு உதவுகின்றன. மொத்தத்தில், ரொம்ம்ம்ப பர்பெக்டா இருக்கணும். கேட்ட உடனே கடன் கொடுத்து முழிக்க நாம் மல்லையா இல்லையே.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்