SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

2019-03-24@ 21:31:36

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய விழாவான பூக்குழி இறங்குதல் ஏப்.4ம் தேதி நடைபெறுகிறது.  பூக்குழி இறங்கும் பக்தர்கள் இன்றுமுதல் விரதத்தை துவக்கியுள்ளனர். கொடியேற்றத்தையொட்டி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி சுந்தர் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்