SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்

2019-03-24@ 03:40:23

மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பினின் பரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் உலகின் சக்திவாய்ந்த ஹைப்பர் காரை வெளியிட்டு  இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த பினின் பரீனா நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா வசம் வந்தபின் பொருளாதாரத்தில் வலுவாக மாறி இருக்கும் பினின் பரீனா நிறுவனம் தற்போது சொந்தமாக கார்களை  தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. முதல் முயற்சியிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது மஹிந்திரா - பினின் பரீனா  கூட்டணி. ஆம். உலகின் அதிசக்திவாய்ந்த முதல் மின்சார ஹைப்பர் கார் மாடலை பினின் பரீனா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ‘’பேட்டிஸ்டா’’  என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மின்சார கார், ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக பொதுப்பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.

கிரான்ட் டூரர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த மின்சார கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோ வரும் பார்வையாளர்களை பெரிதும் கவரும்  என கருதப்படுகிறது. மொத்தம் 3 கார்களை காட்சிக்கு நிறுத்துகிறது பினின் பரீனா நிறுவனம். மொத்தம் 150 பினின் பரீனா பேட்டிஸ்டா கார்கள்  உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியங்களை குறி வைத்து விற்பனை  செய்யப்பட இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த மின்சார கார் மாடலானது கார்பன் பைபரிலான மோனோகாக் எனப்படும் ஒற்றை உடற்கூடு அமைப்பை  பெற்றிருக்கிறது. எனவே, மிக உறுதியானதாகவும், சிறந்த கையாளுமையை வழங்கும் மாடலாகவும் இருக்கும்.

இந்த காரில் T வடிவிலான 120 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மின்சார கார் என்பதால், சைலென்சர் சப்தத்திற்கு வேலை இல்லை.  புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட இது மிக சக்திவாய்ந்த மாடல். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0-300 கிமீ  வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. இந்த கார், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தை எட்டும் திறன் வாய்ந்தது. ஒருமுறை  பேட்டரியை சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்