SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

2019-03-24@ 00:14:43

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. மலேசியாவின் ஈபோ நகரில் 28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, தென் கொரியா, கனடா, ஜப்பான், மலேசியா, போலந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியுடன் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதுகின்றன.

புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 30ம் தேதி பைனலில் மோத உள்ளன. தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் வருண் குமார் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 56வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் போட்டு அசத்தினார். பதில் கோல் அடிக்க ஜப்பான் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் கொரியா 6-3 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று தென் கொரியாவை சந்திக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்