SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையுடன் 2வது டி20 தென் ஆப்ரிக்கா வெற்றி

2019-03-24@ 00:13:40

செஞ்சுரியன்: இலங்கை அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. ஹெண்ட்ரிக்ஸ் 65 ரன் (46 பந்து, 9 பவுண்டரி), வான் டெர் டஸன் 64 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டுமினி 33* ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டிக்வெல்லா 20, திசாரா பெரேரா 22 ரன் எடுத்தனர். 8வது வீரராகக் களமிறங்கிய இசுரு உடனா அதிரடியாக விளையாடி மிரட்டினார். அவர் ஆட்டமிழக்காமல் 84 ரன் விளாசிய நிலையில் (48 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மோரிஸ் 3, ஸ்டெயின், ஷம்சி தலா 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். வான் டெர் டஸன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 ஜோகன்னஸ்பர்கில் இன்று நடக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்