SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களத்திலேயே இல்லாத கட்சி அமமுக... இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

2019-03-23@ 10:10:30

ஸ்ரீவில்லிப்புத்தூர்: வரும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலோடு அமமுக-விற்கு மூடுவிழா நடத்தப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அக்கட்சியில் உள்ள அனைவரும் அதிமுகவிற்கு வந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருவமான கிருஷ்ணசாமியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், களத்திலேயே இல்லாத கட்சி அமமுக. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம். தனி சேட்டிலைட்,  வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார் என்ற ரீதியில் இன்னும் என அறிவிப்புகளை வேண்டுமானாலும் வெளியிடலாம்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ன என வினவினார். டிடிவி அணியிலருந்து ஒவ்வொருவராக கழன்று கொண்டிருப்பதாகவும், விரைவிலேயே அந்த அணி முழுவதுமாக கரைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.  ஏற்கனவே ரூ.20 டோக்கன் கொடுத்துத்தான் ஆர்.கே. நகர்ல வென்றார் டிடிவி.  மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் டோக்கனை வைத்தே அவரை அடித்து விரட்டுவார்கள் என்றார். கமல் கட்சி குறித்த கேள்விக்கு பதிலளி்த்த அமைச்சர், பொது இடங்களில் எங்கேயாவது கமல் கட்சிக்காரர்களை பார்க்க முடிகிறதா. ஒரு அறையில் கூடி கூட்டம் போட்டு விட்டு, அங்கேயே வேட்பாளர்களை அறிவித்து விடுகின்றனர் என்றார் கிண்டலாக.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்